ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது உலக அளவில் உள்ள சிறந்த வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் தான் ஒலிம்பிக் போட்டி. சென்ற வருடம் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி கொரோனாவின் தாக்கத்தால் தள்ளி வைக்கபட்டத்து. கடைசியாக கடந்த 2016- ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதும் பதக்கங்களை அள்ளுவத்தில் உலகநாடுகளிடையே போட்டோ போட்டி இருக்கும்.
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதம் தொடங்குகிறது. ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுகிறது ஒலிம்பிக் போட்டிகள்.,அனைத்து நாடுகளும் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்ற நோக்கில் தயாராகி வருகின்றது இந்தியாவும் ஒலிம்பிக்கில் சென்ற முறையை விட இந்த முறை அதிக பதக்கங்களைப் என்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது.
தமிழகத்திலிருந்து பதினோரு வீரர்-வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்குபெறுகிறார்கள் இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு பதினோரு வீரர்-வீராங்கனைகள் தடகள போட்டி வாள் சண்டை டேபிள் டென்னிஸ் உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்குபெறுகிறார்கள்.
மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றால் 3 கோடி வெள்ளிப் பதக்கம் வென்றால் இரண்டு கோடியும் வென்றால் என்றால் ஒரு கோடியும் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது இந்த நிலையில் ஒலிம்பிக்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர் வீராங்கனைகளுக்கு 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கப்படும் என்ற முத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின்