தமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா?
அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழக பிஜேபி தலைவர் முருகன் மத்திய அமைச்சராகி விட்டதால் தமிழக பிஜேபிக்கு அடுத்த தலைவர் தேர்வு நடைபெற இருக்கிறது. அண்ணாமலையா? இல்லை நயினார் நகேந்திரனா? என்று விவாதங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.அண்ணாமலை தான் சரியான ஆள் என்று அண்ணாமலை ஆதரவாளர்களும் நயினார் நாகேந்திரன் தான் சரியான ஆள் என்று அவரின் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள்.
தமிழகத்தில் பிஜேபியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நயினார் நாகேந்திரன் தான் சரி யான சாய்ஸ்.அண்ணாமலையின் அரசியல் அறிவார்ந்த அரசியல். இங்கு அது எடுபட இன்னும் சில காலமாகும்.நயினார் நாகேந்திரன் அரசியல் அனுப வ அரசியல் இது தான் இப்பொழுது செல்லு படியாகும்.அண்ணாமலை போட்டியி ட்ட அரவகுறிச்சியில் பள்ளபட்டியில் உள்ள அதிகமாக வசிக்கும் மக்களின் வாக்குகள் தான் அண்ணாமலையை தோற்கடிக்க துணை புரிந்தது. என்று தகவல்கள் தெரிவிக்கிறது
அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சியில் உள்ள பள்ளப்பட்டி மாதிரியே நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை சட்டமன்ற தொகுதியில் பேட்டை என்கிற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி இருக்கிறது. பள்ளப்பட்டியில் நடைபெற்றது மாதிரியே தான் பேட்டையிலும் பிஜேபியை பிரச்சாரம் செய்ய வரக்கூடாது என்றார்கள்.ஆனால் நயினார் நாகேந்திரன் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக சென்று வி ட்டார். இதனால் அங்கு பிஜேபிக்கு எதிராக முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக வாக்களிக்க வில்லை. பேட்டையில் வாக்குப்பதிவும் குறைவாகவே இருந்தது. இதனால் தான் நயினார் நாகேந்திரன் சுமார் 23,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது தான் அனுபவஅரசியல்.
ஆனால் பள்ளபட்டியில் அண்ணாமலையின் பிரசாரத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை தேசிய அளவில் அண்ணாமலை கொண்டு செல்ல இதனால் பள்ளப்பட்டி யில் உள்ள சமூகத்தினர் ஒன்று கூடி அண்ணாமலைக்கு எதிராக வாக்களித்து தோற்கடித்தார்கள்.பள்ளபட்டி விவகாரத்தை அண்ணாமலைஅமைதியாக கடந்து சென்று இருந்தால் நிச்சயமாக தோற்று இருக்க மாட்டார். அண்ணாமலையின் அறிவு சட்டத்தை பேசியதால் பிஜேபிக்கு எதிராக பள்ளப்பட்டியில் ஒரே சமூக ஓட்டுக்களை ஒன்றிணைய வைத்து பிஜேபிக்கு எதிராக வாக்களி்க்க வைத்தது.
ஆனால் நயினார் நாகேந்திரனின் அனுபவம் நயினார் நாகேந்திரனை வெற்றி பெற வைத்தது நயினார் நாகேந்திரனின் இந்த அனுபவஅரசியல் தான் தமிழக பிஜேபிக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. மேலும் அவரின் சமூகம் . கோவையை மையமாக கொண்டு தமிழக பாஜக செயல்பட்டால் தமிழகம் முழுவதும் வளர்வது கடினம். அதுவும் கொண்டு மண்டலத்தில் கவுண்டருக்கு என ஒரு தலைவர் உருவாகிவிட்டார் . அவர் தான் எடப்பாடி என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் திமுகவை ஆட்டி படைத்த மண்டலம் கோவை மண்டலம் அதிமுகவின் கோட்டை என்றாகிவிட்டது. வேலுமணியை தாண்டி அங்கு ஒன்றும் வேலை செய்யாது.
என்பது அறிந்ததே. சமூக வலைத்தளங்களில் ஆதரவை வைத்து கட்சி தலைவரை தேர்ந்தெடுத்தால் பாஜக தமிழகத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்வது கனவே!
அதிமுக கூட்டணி தமிழகத்தில் தோற்பதற்கு காரணம் முக்குலத்தோர் ஓட்டுகள் கிடைக்கவில்லை அதை ஒருங்கிணைக்க தற்போது யாரும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே அமுமுக வில் இருந்து செல்லும் முக்குலத்தோரை பாஜக பக்கம் இழுப்பதற்கு ஒரே சாய்ஸ் நைனார் நாகேந்திரன் மட்டுமே. மேலும்
அதிமுகவில் இருந்து செல்வாக்கான த லைவர்களை திமுக இழுக்க இருக்கிறதுஇந்த நிலையில் திமுகவை விரும்பாத அதிமுக தலைவர்களை பிஜேபிக்கு நயினார் நாகேந்திரன் மூலமாக கொண்டு வருவதன் மூலமாக தமிழகத்தில்பிஜேபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் அதிமுக வலுவான கட்சி தான்.ஆனால் எதிர்கட்சியாக அது எப்பொழுதும் சிறப்பு பாக செயல்பட்டது இல்லை. ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த 2006-2011 காலத்தில் அதிமுக எந்த ஒரு மக்கள் நலம் சார்ந்த போராட்டத்தையும் மேற் கொ ண்டதே கிடையாது.ஏனென்றால் இன்னும் 5 வருடத்திற்கு திமுகவை ஒன்றும் செய்ய முடியாது அத னால் எதற்காக பணத்தையும் உழைப் பையும் வேஸ்ட் செய்ய வேண்டும் என்று கொடநாடு எஸ்டேட்டில் போய் ஹாயாக
அமர்ந்து விடுவார்.
திமுக ஆட்சியில் இருந்த 2006 -20011 ம் ஆண்டு காலத்தில் நடைபெற்ற உள்ளா ட்சி தேர்தல் இடைத்தேர்தல் லோக்சபா தேர்தல் என்று ஒன்றில் கூட அதிமுகவி னால் வெற்றி பெற முடியவில்லை அந்த காலத்தில் நடைபெற்ற 10 சட்டம ன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஒன்றில் கூட வெற்றி பெற வில்லை சில சட்டமன் ற இடைத்தேர்தலை சந்திக்கவே பயந்துஅதிமுக விலகி நின்ற வரலாறும் இரு்க்கிறது.
ஜெயலலிதா காலத்திலேயே அதிமுக ஒரு எதிர்கட்சியாக செயல்பட வில்லை என்கிற பொழுது இப்பொழுது எப்படி செயல்படுவாரகள்? அதனால் பிஜேபி தொடர்ந்து திமுக எதிர்ப்பு அரசியலை எடுத்து சென்றாலே போதும் திமுக எதிர்ப்பு வாக்குகள் திசை மாறி பிஜேபியை நோக்கி நகர ஆரம்பிக்கும்.இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் மாதிரி அதிமுகவில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை பிஜேபிக்கு கொண்டு வந்தாலே போதும் அந்த பகுதிகளி ல் பிஜேபி வளர்ந்து விடும்.தி.முகவை பொறுத்த வரை அது தொடர்
ந்து தமிழக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றால் அதிமுகவை உடைத்து அதில் இருந்து செல்வாக்கான ஆட்களை திமுக வுக்கு கொண்டு வர வேண்டும்.
பிஜேபியை பொறுத்த வரை அது தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் அதிமுக வை உடைத்து அதில் இருந்து செல்வாக்கான தலைவர்களை பிஜேபிக்கு கொண்டு வர வேண்டும்.ஆக இரண்டு கட்சிகளின் நோக்கம் ஒன்று தான் என்பதால் அதிமுக உடைவதைதிமுக பிஜேபி என இரண்டு கட்சிகளும் எதிர்பார்த்தே இருக்கின்றன.ஆனான ப்பட்ட ஜெயலலிதா காலத்திலேயே அதிமுக ஆட்சியில் இல்லாத 2006-2011 காலங்களில் திமுகவை நோக்கிபல அதிமுக தலைவர்கள் சென்றதை ஜெயலலிதாவினால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடி ந்தது.
திமுக இப்பொழுது ஆளும்கட்சியாக இருப்பதால் இனி வரும் எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறுவது மிகவும் கடினமானது என்பதால் தேர்தல் தோல்விக ளை முன் வைத்து அதிமுகவில் கலகங்கள் உருவாகி கட்சி உடையும் நிலை ஏற்படும்.அப்பொழுது திமுக பக்கம் ஒரு குரூப் சென்றால் இன்னொரு குரூப்பை பிஜேபி க்கு கொண்டு வர வேண்டும். அதை செய்ய சரியான நபர் அதிமுகவில் இருந்து பிஜேபிக்கு வந்த நயினார் நாகேந்திரன் தான்.என்பது சற்று சிந்திக்க வைக்கும் யோசனை