இந்திய அரசமைப்பால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கான போட்டி தேர்வை நடத்துவது குறித்து வங்கியியல் ஆட்சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் குறித்து ஊடக செய்தி வெளியாகியுள்ளது. வங்கி தேர்வுகள் உள்ளூர் மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் 2019-ம் ஆண்டு கூறியிருந்ததை அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
பிராந்திய ஊரக வங்கிகள் குறித்து பேசும் போது தான் மேற்கண்டவாறு நிதி அமைச்சர் கூறியிருந்தார் என்று தெளிவுப்படுத்தப் படுகிறது. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம களத்தை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை கொங்கனி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களில் எழுத்தர் வகைப்பணிகளுக்கு உள்ளூர்/பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அதன் பரிந்துரைகளை இக்குழு வழங்கும்.
குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை வங்கியியல் ஆட்சேர்ப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது.