• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, June 6, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

அரசு பள்ளி,மருத்துவமனை கட்டடங்கள் விரைவாகவும்‌, தரமாகவும்‌ அமைத்திட வேண்டும்‌! முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

by admin
July 14, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ்நாடு
0
தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சி!பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்!
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசுப்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரிக்‌ கட்டடங்கள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ அரசு துறைக்‌ கட்டடங்களை விரைவாகவும்‌, தரமாகவும்‌ அமைத்திட வேண்டும்‌” பொதுப்பணித்‌ துறை ஆய்வுக்‌ கூட்டத்தில்‌
மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ இன்று (13.07.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, பொதுப்பணித்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌, புதிதாக செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள்‌ குறித்தும்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌, அரசுப்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரிக்‌ கட்டடங்கள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌ மற்றும்‌ அரசு துறைக்‌ கட்டடங்களை விரைவாகவும்‌,தரமாகவும்‌ உரிய காலத்தில்‌ கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, மதுரையில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பெயரில்‌ சர்வதேசதரத்திலான பொது நூலகம்‌, சென்னை, கிண்டியிலுள்ள பன்னோக்கு உயர்‌ சிறப்பு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம்‌, கோவில்பட்டியில்‌ எழுத்தாளர்‌ திரு.கி.ராஜநாராயணன்‌ அவர்களுக்கு நினைவகம்‌ ஆகியவற்றை அமைப்பது குறித்தும்‌, 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள சென்னை, வள்ளுவர்‌ கோட்டத்தை புனரமைத்து, அங்கு ஆய்வுக்கூடம்‌ மற்றும்‌ நூலகம்‌ அமைத்து சுற்றுலா பயணிகளை கவரும்‌ வகையில்‌ மேம்படுத்துவது குறித்தும்‌ ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா பேரிடர்‌ காலத்தில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள அரசு மருத்துவமனைகளில்‌ பொதுப்பணித்துறையின்‌ மூலம்‌ அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைப்‌ பிரிவுகள்‌, ஆக்சிஜன்‌ இணைப்புகளுடன்‌ கூடிய படுக்கைகள்‌, அரசு மருத்துவமனைகள்‌ மற்றும்‌ 11 அரசு மருத்துவக்‌ கல்லூரிகள்‌ ஆகியவற்றிற்காக கட்டப்படும்‌ கட்டடப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மாண்புமிகு முதலமைச்சர்‌
அவர்கள்‌ ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்‌.

சிவகங்கை மாவட்டம்‌, கீழடி அகழ்‌ வைப்பக கட்டட வளாகம்‌ மற்றும்‌ பல்வேறு பாரம்பரியக்‌ கட்டடங்களைப்‌ புனரமைப்பு செய்யும்‌ பணிகள்‌ இவற்றின்‌ முன்னேற்றங்கள்‌ ஆகியவை குறித்தும்‌, புதிதாக கட்டப்பட்டுவரும்‌ 6 மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகக்‌ கட்டடங்களின்‌ பணி முன்னேற்றம்‌, நீதிமன்றம்‌ மற்றும்‌ சட்டக்‌ கல்லூரிகளுக்காக கட்டப்படும்‌ கட்டடங்களின்‌ பணி முன்னேற்றம்‌ சேலம்‌ மாவட்டம்‌, தலைவாசலில்‌
கட்டப்பட்டு வரும்‌ அரசு கால்நடை மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையக்‌ கட்டடங்கள்‌ ஆகியவை குறித்தும்‌ ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து அரசுக்‌ கட்டடங்களையும்‌ நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்‌ தரமாக கட்டி முடித்திட வேண்டும்‌ என்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

இக்கூட்டத்தில்‌, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்‌ திரு.எ.வ.வேலு, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இஆ.ப., நிதித்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு.ச.கிருஷ்ணன்‌, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ சந்தீப்‌ சக்சேனா, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை தலைமை முதன்மைப்‌ பொறியாளர்‌ திரு.ஆர்‌.விஸ்வநாத்‌ மற்றும்‌ அரசு உயர்‌
அலுவலர்கள்‌ கலந்துக்‌ கொண்டனர்‌

Share this:

  • Tweet
  • Telegram
Tags: cmstalinMkStalinTAMIL NEWSTamilNadu Govt
admin

admin

Recommended

தமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா?

தமிழக பிஜேபியின் அடுத்த தலைவர்? அண்ணாமலையா ஒரே சமூகத்திற்கு பாஜக பாடுபடுகிறதா ? கோவையில் மட்டும் பாஜக அரசியலா?

4 years ago
செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என காங்கிரஸ் தலைவர் விழுப்புரத்தில் பேச்சு.

செயற்கையாகவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தி வருகின்றது என காங்கிரஸ் தலைவர் விழுப்புரத்தில் பேச்சு.

4 years ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In