நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 42.78 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3,05,03,166 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.35 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 35,087 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,977 ஆக உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.31 சதவீதமாகும்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.22 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 33 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.40 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.45 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: