நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சி இணை அமைச்சர் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி கீழ்க்காணும் தகவல்களை அளித்தார்:
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 2020-21-ம் வருடத்தில் 50,09,014 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34,00,006 வீடுகளுக்கானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு 2.95 கோடி வீடுகளை வழங்கி அனைவருக்கும் சொந்த வீடு எனும் இலக்கை எட்டுவதை இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சிறந்து விளங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
ரூ 39,293 கோடி மொத்த மதிப்பீட்டிலான ஏழைகள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 50.78 கோடி மனித நாட்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குத் திரும்பும் இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக 2020 ஜூன் 21 ஏழைகள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் இந்திய அரசின் 12 அமைச்சகங்கள் / துறைகள் ஈடுபட்டன. இதில் பணிக்கு ஏற்றவாறு ஊதியங்கள் வழங்கப்பட்டன.
202122,-ம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு ரூபாய் 73 ஆயிரம் கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11,500 கோடி அதிகமாகும்.
6.51 கோடி நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, 130.9 கோடிக்கும் அதிகமான மனித நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய 2021-22-ம் ஆண்டில் 25 லட்சத்துக்கும் அதிகமானச் சொத்துகள் இத்திட்டத்தின் கீழ் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன.
2021 ஜூலை 23 வரை, 2021-22-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 54.99 லட்சம் நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பணியாளர் பதிவேடு நிறைவு செய்யப்பட்ட 15 நாட்களில் சுமார் 99.5 சதவீதம் நிதி பரிவர்த்தனை உத்தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களுக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்குவதற்காக Ne-FMS-ஐ அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண முறையை 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் இதுவரை செயல்படுத்தி உள்ளன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 2018-19-ம் ஆண்டு ரூ 4951.66 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 5447.80 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 8941.26 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.