நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 50.68 கோடி கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3,10,99,771 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39%.
கடந்த 24 மணி நேரத்தில் 43,910 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,06,822 ஆக உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.27%.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.38%ஆக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் 13 நாட்களாக 3%க்கும் கீழ், 2.27%ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 48.00 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 52.37 கோடிக்கும் அதிகமான (52,37,50,890) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 8,99,260 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இவற்றில், இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 50,32,77,942 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 2.42 கோடி (2,42,87,160) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
coro