தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மெலாரிப்பட்டு ஊராட்சியில் வார்டு 3ல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மணிகண்டன் எனும் வேட்பாளர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய 100 டவர் பெண்களை பதுக்கி வைத்திருந்ததாக தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை துணை வட்டாச்சியர் விஜயன் தலைமையில், சிரப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் தலைமை காவலர் பழனிவேல், முதல் நிலை காவலர் ராமராஜன் சேர்ந்த ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் மணிகண்டன் வீட்டை சோதனை செய்தனர். அவரது வீட்டில் ஏதும் இல்லாத நிலையில், அவரது சித்தப்பா ரகோத்தமன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் ஒரு அறையில் 100 டவர் பேன்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், திருப்பாலபந்தல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர். போலிசார் இதுகுறித்து போலீசார் வேட்பாளர், மணிகண்டன் அவரது சித்தப்பா ரகோத்தமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.