கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஏ.வா.வேலு சிறப்பு உரையாற்றிய போது; திருக்கோவிலூர் எனது தொப்புள் கொடி சொந்தமான ஊர், திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் தான் எனது தாய் ஊர், நான் பிறந்த ஊர் என கூறினார். பின்னர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும் திமுக இந்த ஐந்து மாதங்களில் செய்த திட்டங்களை எடுத்து கூறினால் தானாக மக்கள் ஓட்டு போடுவார்கள் எனவும்.
சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் ஜெயராமன் அவர்கள், திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார் எனவும், என்னால் பொருத்துக் கொள்ள முடியாமல் எழுத்து நாங்கள் 500 வாக்குறுதிகள் கொடுத்து உள்ளோம், ஆண்டுக்கு 100 வாக்குறுதிகள் நிறைவேற்றும் பட்சத்தில், 5 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுவோம் என தெரிவித்தார்.
பின்னர், தமிழக முதல்வர் தற்போது ஐந்து மாதங்களில் இந்த அரசு 200 வாக்குறுதிகள் செய்து முடித்து உள்ளது என தெரிவித்தார். எனவே வேட்பாளர்கள் அனைவரும் ஆட்சியில் செய்யப்பட்டு வரும் நலத்திடங்கள் குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறினால் தாமாக மக்கள் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார். மேலும், திமுகவினர் மேடை பிரச்சாரம் செய்ய கூடாது, உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரையில், திண்ணை பிரச்சாரம் தான் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.