தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.சிறிய கட்சிகளான நாம் தமிழர் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்த நிலையில் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இது தீயாக பரவியது .
இந்த நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை சந்திர சேகருக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இது வேற என ரசிகர்கள் நொந்துபோயுள்ளார்கள். இதன் காரணமாக விஜய், எஸ் ஏ சியிடம் பேசுவது இல்லை. விஜய் தாய் மற்றும் தந்தை மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் ஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றி அவரது தந்தை பேசியுள்ளார் பேசிய ஒரு வீடியோ கிளிப் சமூக வலைத்தளத்தில் பரவியது. மேலும் அது தொடர்பான செய்திகள் ஒரு வார இதழில் வெளிவந்தது.
தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
இன்றைய வார இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது. அந்த பேட்டி மிகவும் நன்றாக உள்ளது. நான் கூறியிருந்த தகவல்களை சரியாக பதிவு செய்து இருந்தார்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒரு தவறான, நான் சொல்லாத ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்துள்ளார்கள். அதற்காகவே இந்த விளக்கம்.
நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளேயே வரச்சொன்னதாகவும் நாங்கள் இருவருமே திரும்பி வந்து விட்டதாகவும் ஒரு தவறான செய்தியை அதில் பதிவு செய்துள்ளார்கள். அது உண்மை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஏனெனில் எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் விஜய்யும் அவருடைய தாயும் எப்பொழுதும் போல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கின்றார்கள், பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, மனக்கசப்பும் இல்லை.
அவ்வாறு இருக்கும்போது ஷோபா அவர்கள் வீட்டின் வெளியே காத்திருந்ததாக பொய்யான ஒரு தகவலை பதிவு செய்ததற்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றேன். இதை விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறேன்’ என்றார்