சமந்தா அக்கினேனி தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்ஒரு மலையாள, தெலுங்கு தம்பதிக்கு பிறந்த இவர் சென்னையில் வளர்ந்தார். 2007 இல் இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கினார்.
பின் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் நடந்தது. நாக சைதன்யா இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் முன்னணி நடிகர் நாகார்ஜுனா வின் மகன் ஆவார்.
சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதிக்கு விவாகரத்து நடக்கப்போவதாக ஒரு புரளி தாறுமாறாக பரவியது. கணவர் நாக சைதன்யா கலந்து கொண்ட பொது நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொள்ளவில்லை இதன் காரணமாகவே தான் புரளி கிளம்பியது.
இதனிடையே சமந்தா வசித்து வரும் வீட்டினை காலி செய்து மும்பை போவதாக அடுத்த புரளி ஒரு தீயாக பரவியது. இந்த புரளிக்கு , சமந்தா பதிலளித்துள்ளார். மும்பையில் குடியேற போவதாக வெளியான தகவலை மறுத்த நடிகை சமந்தா தான் ஹைத்ராபாத்தை விட்டு எங்கும் போகவில்லை நான் வளர்ந்த வீட்டை விட்டு எங்கு போவேன் என்று பதிலளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே இது குறித்து இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்கவில்லை.
சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. என்று தெரிவித்திருந்தது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது. என ஒரு பேட்டியில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, கூறியுள்ளதால். சமந்தா நாகசைதன்யா, விவாகரத்து புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.