விஜய் தொலைகாட்சியில் நட்சத்திர தொகுப்பாளரர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருக்கு என தனியாக ரசிகர் கூட்டம் தமிழகத்தில் அதிகம் உள்ளது. அதுவும் பல குடும்பங்கள் தன் வீட்டு பிள்ளை பாவித்துக்கொள்வார்கள். திருமணம் முடிந்த பிறகு பல நிகழ்ச்சிகளிலிருந்து விலகி விட்டார்.
அதன் பின் கணவருடன் இருந்தும் விலகிவிட்டார். கடந்த வருடம் காலில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை காரணமாக டிடி யால் அதிக நேரம் நிற்கமுடியாது. அதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில்லை. சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொள்கிறார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் அந்தமானுக்கு சுற்றுலாசென்றுள்ள டிடி . பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். . சமீபத்தில் அவர் அந்தமான் காட்டு பகுதியில் இருக்கும் போட்டோவை பகிர்ந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் ‘சர்வைவர் ஷோவுக்கு போறீங்களா’ என கேட்டிருந்தனர். ‘அட பாவிங்களா, எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க’ என கேட்டிருந்தார் பதில் அளித்தார்.
இதனிடையே நேற்று இவர் கடற்கரையில் நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த டிடி
கவர்ச்சி அது உடையில் அல்ல, மனநிலை தான் காரணம். நான் கடலில் குளிக்க நீச்சல் உடை அணிந்திருக்கிறேன். அந்தமானில், உள்ள ஆண்களுக்கு இந்த உடை தவறாகவோ உணர வைக்கவில்லை. அதனால் அது mindsetல் தான் இருக்கிறது. என கூறியுள்ளார்.