சமீபகாலமாக திரையுலகினர் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
அந்தவகையில் கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தனது குடியிருப்பில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் சின்னத்திரை மட்டுமின்றி கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர் தூக்கிட்டு அறையில் கிடைத்த கடிதத்தில் சினிமாவில் உள்ள வேலைபலு காரணமாகவும் தனது உடல் நிலை காரணமாகவும் இந்த முடிவு எடுத்ததாக எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கடிதம் செப்டம்பர் 27 , 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களாக கடிதம் எழுதப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே தற்கொலை முயற்சி எடுப்பதற்கு முன் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.