தரமான போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ரிச்சட் ,வாதாபி ராஜன் என்ற அரசியல்வாதியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், போலீசாக வரும் தம்பி ராமையா, வழக்கறிஞர் ராதாரவி, அம்மாவாக வரும் தீபா ஆகியோர் நடிப்பு மனதில் நிற்கிறது.
பள்ளி அருகே கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்களை துரத்திப் பிடித்து கைது செய்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருத்ர பிரபாகரன், ஆனாலும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சின்ன சின்னதாக வழக்குப் போட்டு அவர்களை விடுதலை செய்கிறார்.
அவர்களைத் துரத்தி பிடிக்கும்போது இன்ஸ்பெக்டர் தள்ளிவிட்டதில் பைக்கில் இருந்து விழுந்த அந்த இளைஞர்களில் ஒருவர் சில நாட்கள் கழித்து இறந்து போகிறார், அந்த மரணம் அரசியல் ஆகிறது.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அந்த இறந்த இளைஞனின் உறவினர்கள் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்
மீடியா அதைத் தூண்டுகிறது. அந்த சட்டத்தில் கைதான இன்ஸ்பெக்டர் வழக்கிலிருந்து விடுதலையானாரா? அவரை சிக்க வைத்த பின்னணி என்ன என்பதுதான் ருத்ர தாண்டவத்தின் கதை.
முதல் பாதியில் சிறிது தொய்வாக நகரும் கதை வன்கொடுமை சட்டம் வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது சூடு பிடிக்கிறது.
கோர்ட்டில் நடக்கும் விவாதங்கள் திருப்பங்கள் சினிமாவை கடந்து சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
படத்தில் பல நிறை குறைகள் இருந்தாலும் இந்திய அளவில் பலரும் பேசத் தயங்கும் விஷயங்களை துணிந்து சினிமா மொழியில் பேசி இருக்கிறார் இயக்குனர் மோகன்ஜி.
படத்தில் கமர்சியல் விஷயங்கள் குறைவாக இருந்தாலும் காந்தி மாதிரி அம்பேத்கரும் இந்தியா முழுக்க அனைத்து தரப்பினரும் கொண்டாடப்பட வேண்டிய தலைவர் அவரை ஒரு எல்லைக்குள் அடைக்கக் கூடாது.
வன்கொடுமை சட்ட வழக்கை சுய லாபத்திற்கு பயன்படுத்தக் கூடாது . மதம் மாறிய பட்டியல் இனத்தவர்கள், இந்துக்களின் ஜாதி பிரிவை பயன்படுத்தக் கூடாது, குடியை விட வேகமாக வளர்ந்து இளைஞர்களை அழிக்கும் போதை மருந்து கலாச்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் மனதில் ஆழமாக நிற்கின்றன.
மொத்தத்தில் ருத்ர தாண்டவம் தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கான படம்.