பிக் பாஸ் சீசன் – 5 தொடங்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் டிவி. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அட இந்த ஆரம்பிச்சது ல முதல் நாள், காலை 6.20-ன்னு கேட்டு எத்தனை மாதங்கள் ஆகிவிட்டது. வாருங்கள் நாம் எபிசோடுக்குள்ள போலாம். எல்லாருக்கும் சகஜமாக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. தாமரைச்செல்வி மிகவும் பாசிட்டிவ் வைபை என தருகிறார் என சொல்வதற்கு வந்து, அதற்கான தமிழ் வார்த்தையைத் தேடுகிறார்கள்.
ஐக்கியும், அக்ஷராவும். சிபி நேர்மறை என்று சொல்ல, ஐய்யயோ அது Opposite என்கிறார் அக்ஷரா. பாவம் சிபியே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு. பின்பு அண்ணாச்சி, இமான் நல்ல விதமாக பேசுதல்னு ஒரு புது மீனிங்கைக் கொடுக்க, அதுவும் புரிந்ததுபோலவே தலையாட்டுகிறார் அக்ஷரா.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு, சுத்தமாக புரியாமல் உட்கார்ந்திருக்கிறார் ஜெர்மனி மதுமிதா. . கண்டிப்பாக ஜெர்மனி மதுமிதா வுக்கு தமிழ் ஆங்கிலம் ஜெர்மன் கலந்த ஒரு டிக்ஷனரி தேவை எனத் தெரிகிறது.
மைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார் சின்னப்பொண்ணு. எல்லார் முகத்திலும் அப்படி ஒரு பிரகாசம்.. அப்பாடா சோத்துக்கு பிரச்சனையில்ல என்பதுபோல் தலையாட்டி சிரிக்கிறார் ப்ரியங்கா.
பிக்பாஸ் லிவிங் ஏரியாவுக்கு உள்ளே கூப்பிட்டார்கள் கேப்டன் உள்ளோரும் வரிசையாக நின்று தங்களுக்கு ஒதுக்கிய வேலைகளை செய்ய புறப்பட்டார்கள் முதலில் சென்றது நம்ம ராஜு மோகன், டீம் தான். நான் பாத்ரூம் சுத்தம் பண்றேன்னு ராஜு சொன்னதும், ப்ரியங்கா, இசைவாணி டீம் ஸ்லோகன் ரெடி பண்ணிவிட்டது. “நாங்கள்ளாம் ஒன்னானோம், கக்கூஸ் கழுவி ட்ரெண்ட் ஆனோம்” – பிரியங்கா கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணிவிட்டார் அவருக்கு அது தான் சோறு போடுது………..
உடனே பிரியங்கா . காலர் ட்யூன்லயே வைக்கலாம் போலருக்கே. என கூட இருப்பவர்கள் சொல்ல அடடே என . நமீதா பாத்திரம் கழுவும் டீமின் கேப்டனாக தன்னை அறிவித்துக்கொண்டார். “நாங்கள்ளாம் ஒன்னானோம், பாத்திரம் கழுவி ட்ரெண்டானோம்” என்கிறது கேங்.
அடுத்துதான் ஆப்பு அடித்தார் பிக் பாஸ் கேப்டன்களை கூப்பிட்டு நீங்க உங்க அணி நபர்களை தேர்ந்தெடுங்கள் என்று சொன்னார் அதில் ஒரு ட்விஸ்டும் வைத்தார் உலக நாயகன். அணி தலைவர்கள் ”அணித்தலைவர்கள் எல்லாரும், அவங்கவங்க அணிகளுக்கான நபர்களை, யாருக்கிட்டயும் கலந்து பேசாம தேர்வு செஞ்சு சொல்லணும்” என்கிறார் பிக்பாஸ்.
இவ்வளவு நேரம் கூத்தடித்து கலாய்த்து தள்ளிய பிரியங்கா கேங்கிற்கு மூஞ்சில் ஈ ஆடவில்லை. பின் அணி நபர்கள் தேர்ந்தெடுக்க பட்டர்கள்.
1.அபிஷேக்கையும், தாமரைச்செல்வியையும், வருணையும், அண்ணாச்சியையும் கைகாட்டினார் ராஜூ
2.அபிநய், இசைவாணி, நடியா சாங், ஐய்க்கி என்றார் பாவனி
3.ப்ரியங்காவையும், அக்ஷராவையும், சிபியையும் கைகாட்டினார் சின்னப்பொண்ணு
4.மதுமிதாவையும், சுருதியையும், நிரூப்பையும் காட்டினார் நமிதா.
ப்ரியங்கா, ஐய்க்கி, இமான், சுருதி, நடியா சாங்னு எல்லா க்யூட்டிகளும் சேர்ந்து வேறு வேறு எமோஷன்களுக்கு நோ சொல்கிறார்கள். ராஜுவிடம் ஒரு கேங் கதை சொல்ல கேட்கிறது. ஹாரர் கதை சொன்ன ராஜு, அப்படியே கடைசியில் காமெடி ஸோனுக்கு கொண்டு போய்விட்டார். எல்லோரும் பயப்பட ஆரம்பிச்சு, கடைசியில் எல்லோரும் தவழ்ந்து தவழ்ந்து சிரித்தார்கள்.
சண்டைகள் இல்லாத பிக்பாஸ் ரொம்ப ரொம்ப ரேர். ஆனாலும் இன்னைக்கு செம்ம ஜாலி எபிசோட்.