பாடும் நிலா பல சாதனைக்கு சொந்தக்காரர் இவர் பாடிய பாடல்களை கேட்காத காதுக்குள் இல்லை ரசிக்காத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம் அவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் என பன்முகத்தன்மை கொண்டவர்.
ரஜினி நடிக்க, சிவா இயக்கத்தில் டி.இமான் இசையமைத்துள்ள, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலை, மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் இந்த பாடல் தான் எஸ்.பி.பி அவர்களின் கடைசி பாடல்.
இது குறித்து ரஜினி தன் டுவிட்டரில் பக்கத்தில் ஓர் உருக்குமான பதிவினை போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நாற்பத்தி ஐந்து ஆண்டுகள், என் குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி. அண்ணாத்த படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, ‘இது தான் அவர் எனக்கு பாடும் கடைசி பாடலாக இருக்கும்’ என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
என் அன்பு எஸ்.பி.பி., தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்