• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 7, 2025
  • Login
KOVAL CITY
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
No Result
View All Result
KOVAL CITY
No Result
View All Result
Home செய்திகள்

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

by admin
November 13, 2021
in செய்திகள், தமிழகம்
0
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!
0
SHARES
279
VIEWS
Share on FacebookShare on Twitter

கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  நேற்று மயங்கி விழுந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் சேவையை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. பலஆயிரம் கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதற்கிடையிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் சேதங்களை அகற்றி, பொதுமக்களை மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். பலரை காப்பாற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.

சென்னை டி.பி.சத்திரம் அருகே அண்ணாநகர் பகுதியில் மரம் விழுந்ததில் உதயா என்ற நபரை சிக்கிக் கொண்டார் என்ற தகவலை அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் சென்றார்கள். 

மயங்கிய நிலையில் கிடந்த நபரை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது!

உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே!

அவரை நேரில் அழைத்துப் பாராட்டினேன். pic.twitter.com/zO2LV5hvFE

— M.K.Stalin (@mkstalin) November 12, 2021

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அவரை, “சிங்கப்பெண்ணே, மனிதநேயம் கொண்டவர்” துணிச்சலான பெண்” என பாராட்டி வருகின்றனர். ஆனால் மயங்கி விழுந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Share this:

  • Tweet
  • Telegram
Tags: BREAKING NEWSFakeNewsHOTNEWSNEWSNEWS18TAMILPolicePOLIMER NEWSPOLITICALSNIPER NEWSTAMILtamil naduTAMIL NEWSTamilNadu Govtஅரசுதமிழ்நாடுதிமுகபோலிஸ்முக ஸ்டாலின்முதல்வர்
admin

admin

Recommended

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

திருக்கோவிலூர் காவல் நிலையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

9 months ago
திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

திருக்கோவிலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

9 months ago

Popular News

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

Connect with us

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • Uncategorized
  • இந்தியா
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ்நாடு
  • மருத்துவம்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

About Us

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In