பிரதமர் மோடி தீபாவளி முந்தைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு க=குறைப்பதாக அறிவித்ததை தொடர்ந்து.மற்ற மாநிலங்களும் குறைத்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை இதுவரை குறைத்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைப்பதற்காக நவம்பர் 3, 2021 அன்று இந்திய அரசு எடுத்த முடிவைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு குறைத்த போது, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்வருமாறு: மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான்.
வாட் குறைப்பை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கணிசமாக குறைந்துள்ளன.