சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு, 2,926 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனுாரில், தென்பெண்ணை
ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள சாத்
தனுார் அணையில், 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஷட்டர் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அணையின் 119 அடி உயரத்தில், 99 அடி நீர் அளவிற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
இதனால், தற்போது பெய்து வரும் கன மழையினால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பிரதான மடங்கான 9 மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 926 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.