நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ உயர் அதிகாரிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே இன்று காலை திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் சார்பில் முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, இராணுவ வீரர்களுடன் இணைந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் முப்படை தளபதியின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலியிடன் கூடிய வீரவணக்கம் செலுத்தினர்.