பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜனவரி 11-ம் தேதி முதல் துவக்கம்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு.சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும்,
பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும் இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை.பொங்கல் பேருந்துகளுக்கு tnstc.in, redbus.in, paytm.com, busindia.com, tnstc official app இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பொங்கல் நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.