அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS). மூத்த குடிமக்களுக்கு, உத்தரவாதமான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கு இது ஒரு நல்ல வழி.
அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளன. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், டெபாசிட் உத்தரவாதமான வருமானத்துடன் முற்றிலும் பாதுகாப்பானது.
இந்த முதலீடுகள் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. தபால் அலுவலகம் பல்வேறு வைப்புத் திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் ஒன்று அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகும்.
மூத்த குடிமக்களுக்கு, உத்தரவாதமான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கு இது ஒரு நல்ல வழி.
10 லட்சம் டெபாசிட் செய்தால் முதிர்வுத்தொகை 13.70 லட்சம் ரூபாய்
மூத்த குடிமக்கள் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது முதிர்ச்சியின் போது ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். எனவே முதிவுத்தொகை ரூ.13,70,000 ஆக இருக்கும். கிடைக்கும் வட்டி 3,70,000 ரூபாய் ஆக இருக்கும்.
SCSS இல் குறைந்தபட்ச முதலீடு ரூ 1000
தபால் அலுவலக இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்தத் திட்டத்தில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 1000 ரூபாயின் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். மேலும், இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும்.
SCSS இன் கீழ், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கான திட்டம் இது. 55 வயது அல்லது அதற்கு மேல் ஆனால் 60 வயதுக்கு குறைவானவர் மற்றும் VRS எடுத்தவர்கள் SCSS இல் கணக்கைத் திறக்கலாம்.
ஆனால் அவர் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் இந்தக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்பதும், அதில் டெபாசிட் செய்யப்படும் தொகை ஓய்வூதியப் பலன்களின் அளவை விட அதிகமாக இருக்கக்கூடாது என்பதும் இதற்கான நிபந்தனை ஆகும்.
SCSS இன் கீழ், ஒரு வைப்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தனது மனைவியுடன் வைத்திருக்க முடியும். ஆனால் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 15 லட்சத்தை தாண்டக்கூடாது.
1 லட்சத்திற்கும் குறைவான தொகையுடன் கணக்குகளை ரொக்கமாகத் தொடங்கலாம் ஆனால் அதற்கு மேல் அதிகமான தொகையில் இந்த டெபாசிட்டை செய்தால், காசோலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பிரிவு 80C விலக்கு
SCSS கணக்கில் டெபாசிட் செய்யும் போது வரிச் சலுகையும் உண்டு. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
SCSS இல் வட்டி மூலம் வருமானம் வரி விதிக்கப்படுகிறது. உங்களின் அனைத்து SCSS இன் வட்டி வருமானம் ஆண்டுக்கு ரூ. 50,000க்கு மேல் இருந்தால், உங்கள் TDS கழிக்கத் தொடங்குகிறது. வரித் தொகை உங்கள் வட்டியிலிருந்து கழிக்கப்படும். வட்டி வருமானம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறவில்லை என்றால், படிவம் 15G/15H ஐ சமர்ப்பித்து TDS இலிருந்து நிவாரணம் பெறலாம்.
SCSS இன் அம்சங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்களில் கணக்கைத் திறக்கும் மற்றும் மூடும் நேரத்தில் நாமினேசன் வசதி உள்ளது.
இந்தக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு மாற்றலாம்.
கணக்கு வைத்திருப்பவர்கள், இந்த கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
இந்தக் கணக்கு தொடங்கி 1 வருடம் கழித்து கணக்கை மூடும் போது வைப்புத்தொகையில் 1.5 சதவிகிதம் கழிக்கப்படும், அதே சமயம் 2 வருடங்கள் மூடிய பிறகு வைப்புத்தொகையில் 1 சதவிகிதம் கழிக்கப்படும்.
முதிர்ச்சியடைந்த பிறகு 3 ஆண்டுகளுக்கு இந்த டெபாசிட்டை நீட்டிக்க முடியும். SCSS முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இதற்கு, முதிர்வு தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.