கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள சீணிக்குழி பகுதியைப் சேர்ந்தவர் முகமது பைசல் (45 வயது). இவருடைய மனைவி ஷீபா (44). இந்த தம்பதிகளுக்கு மெஹ்ரா ( 19) அஸ்னா, (14) என்ற மகள்கள் உள்ளது.
முகமது பைசலின் தந்தை ஹமீது (79). கடந்த 3 வருடங்களாக தந்தை மகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை ஹமீது மகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு உள்ளார். இதற்காக மகன் முகமது பைசல் தனது குடும்பத்துடன் தூக்கிக் கொண்டிருந்த போது தந்தை ஹமீது வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி உள்ளார். பின்னர் தான் வைத்திருந்த பெட்ரோலை வீட்டின் மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொடுபுழா போலீசார் பைசலின் தந்தை ஹமீதை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்பாக அந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரை ஹமீது திறந்து விட்டு உள்ளார். இதனால் அருகே உள்ளவர்களால் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் முகமது பைசல் தனது குடும்பத்துடன் தீயில் கருகி உயிரிழந்து உள்ளார். தற்போது பைசலின் தந்தை ஹமீதை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
SOURCE :- ASIANET