கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது செட்டிதாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பு தோப்பு ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழுகிய நிலையில் இருந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கலாம் எனவும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 17 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது தெற்கு பகுதியில் இந்த அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டதாக பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.