சென்னை: பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பா.ம.க.வின் கவுரவ தலைவராக தேர்வான ஜி.கே.மணியும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !
சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன் !
- திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்