திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து,
சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவில் 93 சதவீதத்தம் அதாவது அதன் முழு கொள்ளளவான 119 அடியில் 117 அடி எட்டியது. இதனை தொடர்ந்து அணைக்கு வந்த நீர் அணையின் பாதுகாப்பு கருதியும் பாசன விதிகளின் அடிப்படையிலும் கடந்த ஒரு வாரமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழையின் அளவு சற்று குறைந்ததால் தென்பெண்ணை ஆற்றில் செல்லும் நீரின் அளவும் சற்று குறைந்தது. இதனைத் தொடர்ந்து, வார இறுதி நாளான இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்தும் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.
ஆபத்தை உணராமல் இதுபோன்று செல்பி எடுப்பதால் நீரில் அடித்து செல்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக இப்பகுதி சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.