கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணலூர்பேட்டை அருகே உள்ளது செம்படை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையின் என்பவரது மகன் ஏழுமலை வயது 50.
இவரது சிறுவயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது ஆசையினை தனது பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் இன்று அவருக்கு மொட்டை அடித்து காது குத்தி உள்ளனர்.
அவர்களது குலதெய்வ கோவிலில் நடந்த இந்த நிகழ்வில் அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு அசைவ விருந்து வைக்கப்பட்டது. 5 வயதில் நிறைவேறாத தனது ஆசை 50 வயதில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் நிறைவேறியதால் நெகிழ்ச்சி அடைந்தார் ஏழுமலை