கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நாடொப் பனசெய் அறக்கட்டளை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து 5000 பண விதைகளை நடும் நிகழ்ச்சியில் இன்று ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் அதன் இரண்டு கறைகளிலும் 5000 பண விதைகளை பள்ளி மாணவர்களுடன் இணைந்து நாடொப் பனசெய் அறக்கட்டளை மற்றும் லயன் சங்கம் ஆகியோர் இணைந்து இந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் யோக ஜோதி மற்றும் லயன்ஸ் சங்கம் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுவரை நாடொப் பனசெய் அறக்கட்டளை மூலமாக திருக்கோவிலூர் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பன விதைகள் நட்டு வைத்துள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது நண்பகல் 12 மணி அளவில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது