தமிழகம் முழுவதும் ஜனவரி 11ம் தேதி ஆன இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் நள்ளிரவு ஒரு மணிக்கு அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டது.
படத்தை காண நள்ளிரவு 12 மணி முதல் திரையரங்கு முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து அஜித் கட்டவுட்டருக்கு பாலாபிஷேகம் செய்தனர். திரையரங்கம் திறப்பதற்கு நேரமானதால் மதில் மீது ஏரி குதித்து ரசிகர்கள் உள்ளே சென்றனர்.
திரையரங்குகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலிசார் அவர்களை எச்சரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.