கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களது 106வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சி.வி. சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில்;
எப்போதெல்லாம் எதிர் கட்சி வரிசையில் அமர்கிறதோ அப்போதெல்லாம் பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது அதிமுக
அதிமுக எப்போதெல்லாம் தோல்வி அடைந்ததோ அப்போதெல்லாம் விஸ்வரூபம் அடைந்து வெற்றி அடைந்ததாக தெரிவித்து 89 லே தோல்வி அடைந்தது 91 லே மிகப்பெரிய வெற்றியடைந்தது எனவும், அப்போது கருணாநிதி கூட அம்மா போட்ட பிச்சையிலே வெற்றி பெற்றார். பின்பு ராஜினாமா செய்தார் என தெரிவித்தார். பிறகு 2096 லே அதிமுக தோல்வி என 1996 என்பதற்கு பதிலாக உளறினார் சண்முகம். பிறகு 2001 நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் 30 தொகுதி வெற்றி பெற்றது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பேசினார் 2001 இல் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதிமுக எனவும், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட திமுக பெறவில்லை எனவும் கூறினார். மேலும், விஜயகாந்தின் அருகாமையில் அமர்ந்திருந்தீர்கள் எனவும், கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை எனவும் பேசினார். அம்மாவை சட்டமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க துணிவு இல்லாத பேடிகள் திமுக காரர்கள் என பேசினார்.
திமுகவிலும் ஒரு ஷிண்டே விரைவில் வருவார்;
காலம் நெருங்கி கொண்டிருக்கிறது, அடுத்தது திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார். மகாராஷ்டிராவில் ஒரு ஷிண்டே வந்தது போல திமுகலும் ஒரு ஷிண்டே வருவார். அது யார் என்று நாம் சொல்ல முடியாது, ஒரு கனிமொழியாகவும் இருக்கலாம், துரைமுருகனாகவும் இருக்கலாம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.