மணலூர்ப்பேட்டை அருகே சாலை விரிவக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்தது திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் சாலைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த சாலையின் நடுவே வாய்க்கால் போடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு அவ்வழியாக சென்ற கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் வாய்க்காலில் இறந்து கிடந்த முதியவர் யார் என்று விசாரித்ததில், அவர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்த கொட்ட புலி என்பவரது மகன் ஆறுமுகம் வயது 70 என்பதும், நேற்று இரவு சாலையில் அருகே உள்ள தனது விவசாய நிலத்திற்கு வந்ததும், அப்பொழுது எதிர்பாராத விதமாக வாய்க்காலில் விழுந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து முதியவரின் உடலை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து மணலூர் பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.