திருவாமத்தூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்த எஸ் பி ஸ்ரீநாதா உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகத்தில் கூட்டம் எரிச்சலை பயன்படுத்தி பெண்களின் தாலி செயின் பறிக்கும் குற்ற நபர்களிடமிருந்து பெண்களின் தங்க செயினை பாதுகாக்கும் வண்ணம் safety pin பெண் காவலர்கள் மூலம் வழங்கி தங்கச் செயினை ஜாக்கெட் அல்லது புடவையோடு இணைத்து safety pin யை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனை மீறியும் தங்கச் செயினை பறிக்க முயன்ற மூன்று பெண்கள் போலீஸ் பிடியில் சிக்கினார்கள் டிஎஸ்பி பார்த்திபனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக சமூக வலைதளங்களில் பாராட்டு வருகிறார்கள்