கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காளிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுப்படி பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், வணிக வளாகம், இணையவழி மைய கடைகள், மகளீர் குழுக்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சமுக வளைதளங்களில் காவல் நிலைய அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபு, மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அப்புதுரை மற்றும் காவலர்கள் திருக்கோவிலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு இணையக் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்றும், இணையக் குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும் மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதாகைகள் வைத்தும் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,
மேலும் இணையதளத்தின் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்தனர்.