கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் இன்று குடும்ப அட்டை சிறப்பு குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலக பிரிவில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் உறுப்பினர் சேர்த்தல் பெயர் நீக்கம் கைபேசி எண் இணைத்தல் குடும்ப தலைவர் புகைப்படம் பதிவேற்றும் போன்றவை செய்து தர இருப்பதால் பொதுமக்கள் முகாமில் தகுந்த ஆவணங்களுடன் வந்து பயனடைய வேண்டுமென வட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது