விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயனூர் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மி(35) மற்றும் சுமதி(40) ஆகிய இரண்டு பெண் கூலித் தொழிலாளஏற்களும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில், வீரபாண்டியில் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலுக்கும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி நேரில் மலர் அஞ்சலி செலுத்தி,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மாவட்ட திமுக சார்பில் இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.