விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தமிழகத்திலேயே அதிகபடியாக 273 மிமீ மழை பெய்தது.
இந்த கனமழையின் காரணமாக, கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட காடகனூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய்.10.40 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணி கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில், அன்று இரவு பெய்த கனமழையில் 16 அடி ஆழம் உள்ள குளம் முழுவதும் நீர் நிரம்பி அதில் தூர்வாரும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் மதிப்புள்ள ஹிட்டாச்சி வாகனம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது.
இந்நிலையில், கடந்த இன்று 3வது நாட்களாக மழை இல்லாத காரணத்தினால் குளத்தில் மூழ்கிய ஹிட்டாச்சி வாகனத்தை மீட்கும் முயற்சியில் கடந்த இரண்டு நாட்களாக குளத்தில் இருக்கும் நீரை மோட்டார் உதவியோடு இரைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது நாளான இன்று இரண்டு டிராக்டர் மூலம் ராட்சச மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுவதன் விளைவாக ஹிட்டாச்சி வாகனத்தில் மேல் பகுதி தற்போது தென்பட்டுள்ளது தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்கள் இந்த குளத்தில் உள்ள நீரை அப்புறப்படுத்திவிட்டு அதன் பின்னரே வாகனத்தை வெளியே எடுத்து வரும்போது முடியும் என தெரிவித்துள்ளனர் மூன்றாவது நாளாக ஹிட்டாச்சி வாகனத்தை மீட்பதற்காக குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் உரிமையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது