தமிழக விவசாயிகள் பயிரிடுவதை குறையுங்கள்.. கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சர்ச்சை பேச்சு…
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மீதும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது காவேரி மற்றும் மேகதாது அணை பிரச்சனை.“கர்நாடகத்தின் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் புதிய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை எப்பாடுபட்டாவது தீருவோம், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார்.
இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தமிழக விவசாயிகள் குறித்து அவர் பேசியுள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காவிரியில் இருந்து கர்நாடகா உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விட தமிழ்நாடு கூடுதல் நீரை பயன்படுத்தி விட்டதாக கூறினார். மேலும், வறட்சி காலத்தில், கர்நாடகாவை போன்று தமிழ்நாடு விவசாயிகள் சாகுபடியை கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் உள்ள அணைகளின் நிலவரத்தை, காவிரி மேலாண்மை ஆணையம் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். அணைகளின் நிலவரம் குறித்து மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவிற்கு அளிக்க உள்ள தகவல்களை, உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பிப்போம் என்றும் கர்நாடக துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பது தமிழகத்திற்கு தெரியும். மேலும் நீர் பற்றாக்குறையால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்காக நாஙகள் தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது பயிரிடுவதை தமிழகம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்” என்றார்.