கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமர் என்பவர் உளுந்தூர்பேட்டை காவல்நிலையம் வந்து தான் உளுந்தூர்பேட்டை சென்னை மெயின் ரோட்டில் அன்பு திருமண மண்டபத்தின் எதிரே உள்ள IOC பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வருவதாகவும், நேற்றிரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தாண்டார் கோவில் அஜி மற்றும் அவரது நண்பருடன் வந்து 50 ரூபாய்கு பெட்ரோல் போடு என்று கூறியதாகவும் நானும் அவரது அவரது இருசக்கர வாகனததிற்கு ஐம்பது ரூபாய்கு பெட்ரோல் போட்டதாகவும் அஜய் என்பவர் தன்னைப் பார்த்து ஐம்பது ரூபாய்கு பெட்ரோல் போட்டியா இல்லையா என்று கேட்டார் பின்பு பெட்ரோல் திருடும் பசங்க தானே நீங்க என்று ஆபாசமாக இருவரும் சேர்ந்து தன்னை அடித்தும் கொலைமிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகார்மனு மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உத்தரவுப்படி உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இராஜேஷ் புலன் விசாரணை மேற்கொண்டதில் பூமிநாதன் செங்குறிச்சி மற்றும் அஜி உளுந்தாண்டார் கோவில் ஆகிய இருவரும் சேர்ந்து இக்குற்றசெயலில் ஈடுபட்டது தெரியவரவே உடனடியாக அஜி என்பவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தலைமறைவாக உள்ள பூமிநாதன் என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.