விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள அரசு மைதானத்தில் வருகின்ற 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட துணை சேர்மன் தங்கம், திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபு, ரவி, விஸ்வநாதன், கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் முகையூர் ஒன்றிய பெருந்தலைவர் தனலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்