கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான இந்தியா ஒன் எனும் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த ஏடிஎம் இயந்திரத்தை சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சிவராஜ்(32) என்பவர் கத்தியால் ஏடிஎம் உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளார். அப்போது ATM இயந்திரத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு ATM மையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளருக்கும் அலார்ட் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை அடுத்து ATM மையம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் உடனடியாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருக்கோவிலூர் போலிசார் அவ்வழியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். போலிசார் அங்கு சென்று பார்தத போது சிவராஜ் ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து சிவராஜை போலிசார் கையும் காலமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.
மேலும் காவல் நிலையம் வைத்து விசாரணை மேற்கொண்டனர. அந்த விசாரணையில் கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் கடனை அடைக்க ஏடிஎம், இயந்திரத்தை உடைத்து பணம் எடுத்துக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளான்.
ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.