கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட குழுவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கே,ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கடுமையான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும்,தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் ,பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியில் ஆளும் மோடியின் பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையில 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.