விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரியசெவலை பகுதியில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக செயலாளர் குமரகுரு கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் திருவெண்ணைநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் குமரகுரு பேசியதாவது:- கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக தற்பொழுது எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் வேட்பாளர் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் எனவும் விரைவாக பூத் கமிட்டி அமைக்கும் பணியினை முடிக்க வேண்டும் எனவும் பேசினார்.