விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று ஒன்பதாவது பேரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்னன், சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் முத்து மீனாட்சி உள்ளிட்ட ஆலையின் நிர்வாக குழுவினர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது விழா மேடைக்கு சென்ற விவசாயிகள் சிலர் தங்களது கரும்புகள் பருவம் பெற்று காய்ந்து கிடப்பதாகவும், அரவையை விரைவில் துவங்க வேண்டும் என்றும், அரவை பணியை தொடங்காததால் தங்களது கரும்புகளை காய்ந்து எடை குறைந்து வருவதாகவும், ஆலை நிர்வாகத்தினர் முறையாக பணியில் ஈடுபடாததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் சிலர் புகார் தெரிவித்துக்கொண்டிருந்த விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு வந்திருந்த மற்ற விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ மணிக்கண்ணன் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப் படுத்தி அனுப்பினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.