கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இதனை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அதிமுகவினர்
பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை ஒழிக எனவும், துரோகி அண்ணாமலை எனவும் கோஷங்களை எழுப்பினர்.