கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 805 மாணவர்களுக்கு, 38,37,960 ரூபாய் மதிப்பீட்டில் அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கினார். மேலும், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 45 நபர்களுக்கு சாதிச் சான்றிதழை வழங்கி அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பள்ளி மாணவி ஒருவர் அரசு பள்ளி மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருவதாகவும் பள்ளி முடித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் அரசு பள்ளியில் படிக்கும் எங்களைப் போன்றோருக்கு இலவச மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மிஸ்டர் ஸ்டாலின் மற்றும் விலையில்லா மிதிவண்டியை எங்களுக்கு வழங்க வந்துள்ள மிஸ்டர் பொன்முடி அவர்களுக்கும் எங்களது நன்றி என தெரிவித்தார்.