விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மனக்குப்பம் பகுதியில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தை வந்தது கொரக்கந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கிரன்குமார் மற்றும் செல்வம் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வாகனத்தில் இருந்த மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா இருந்தது தெரிய வந்தது.
இதனை எடுத்து வாகனத்தில் வந்த செல்வம் கிரண் குமார் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் யுவராஜ் என்பவரிடமிருந்து குட்கா பான் மசாலாவை வாங்கி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குன்னத்தூர் கிராமத்தில் உள்ள யுவராஜின் மளிகை கடைக்குச் சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார் மளிகை கடையிலும் அவரது குடோனிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது 9 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா இருந்ததுள்ளது. 10 மூட்டைகளில் இருந்த 168 கிலோ எடை கொண்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பான் மசாலாவை பறிமுதல் செய்த போலிசார் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மளிகை கடை உரிமையாளர் யுவராஜ் உட்பட கிரன்குமார் செல்வம் ஆகிய மூவரின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மளிகை கடை குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.