நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் லியோ னி இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் தரப்பில் ஆடியோ லான்ச் இல்லை என அறிவிப்பு வெளியானது.
இதனால் விஜயின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதிகளில் நான்கு முனை 5 முனை ஏரிக்கரை மூலை எவ்வளவு பல்வேறு நகரின் முக்கிய இடங்களில் ஆடியோ லான்ச் இல்லனா என்ன ஆட்சியைப் பிடித்தால் போச்சு என்ன நண்பா என்ற போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக தற்போது நடிகர் விஜய் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சு வெளியாகி வரும் நிலையில் இந்த போஸ்டர் திருக்கோவிலூர் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது போஸ்டரின் இறுதியில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி என அரசியலில் ஈடுபட போவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது