கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் விஜயின் ‘லியோ’ திரைப்படம் வெற்றியடைய வேண்டியும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக “விஜய் மற்றும் அஜித் இருவரும் சூப்பர் நடிகர்கள் தான்” என்று குறிக்கும் வகையில் பிரஷ்க்கு பதிலாக அஜித் போட்டோவைக் கொண்டு விஜய் படத்தை வரைந்தார்.
கோலிவுட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் யாருக்கு என்று களேபரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? என சமூக வலைத்தளங்களில் மாறி மாறி பதிவிட்டு வருகின்றனர். வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள நடிகர் ஷாம், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில், விஜயிடம் போனில் பேசும்போது அஜித் நடித்த ‘துணிவு’ படமும் பொங்களுக்குதான் ரலீஸ் ஆகிறது என்று கூறினேன், அதற்கு விஜய் அவர்கள் அதனால் என்ன, அவரும் நம் நண்பர்தானே அவரது படமும் வரட்டும், அவரது படமும் நன்றாக ஓடினால் தான் சந்தோசம் தான் என்று விஜய் கூறினார். என நடிகர் ஷாம் தெரிவித்தார்.
ஆகையால் இவர்களது படம் ரிலீஸ் ஆகும்போது விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுகொள்வது வழக்கமாகி விட்டது, ஆனால் விஜய், அஜித் நண்பர்களாக தானே உள்ளனர், இதை ரசிகர்கள் உணர வேண்டும், மோதல் வேண்டாம்.
அஜித் ரசிகரான ஓவியர் செல்வம் அவர்கள் விஜயின் ‘லியோ’ திரைப்படம் வெற்றியடைய வேண்டியும், சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பதிலாக சூப்பர் நடிகர்கள் என்று “விஜய்-அஜித் இருவரும் சூப்பர் நடிகர்கள் தான்” என்பதை குறிக்கும் வகையில் “அஜித் போட்டோவைக் கொண்டு நீர் வண்ணத்தில் போட்டோவை தொட்டு 10 நிமிடங்களில் விஜய் படத்தை அஜித் ரசிகரான ஓவியர் செல்வம் வரைந்தார்.
சு.செல்வம் ஓவியர்
மணலூர்பேட்டை
செல் – 8940292827