விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் திருக்கோவிலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே முடியாத சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது ஆண்களுக்கு இணையாக பெண்களும் படிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. என்றால் அதற்கு முக்கிய காரணம் திமுக ஆட்சியும் கலைஞரும் தான். எனவே ஆண்களுக்கு நிகராக பெண்களும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய நோக்கம். அதற்காக தற்போது திராவிட மாநகராட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் பெருமிதம் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட கவுன்சிலர்கள் பிரபு, ரவிச்சந்திரன்,கள்ளகுறிச்சி மாவட்ட குழு துணை தலைவர் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.