கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள சத்குருஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் உள்ள சந்நிதிகள், சுவாமிகளின் ஆலயம், மணி மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றின் மஹா கும்பாபிஷேகம் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
கா்நாடகம் மாநிலம், மங்களாபுரியில் அவதரித்த சத்குரு ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளின் தபோவனம் திருக்கோவிலூரிலிருந்து 4 கிலோ மீட்டா் தொலைவில் திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் தென்பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்துள்ளது.
இந்த தபோவனத்தில் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூா்த்திகளின் சந்நிதிகள்,ஞான மகாலிங்கம் மற்றும் சுவாமிகளின் அருளாலயம், மணிமண்டபம், ராஜகோபுரம் ஆகியவை மிகுந்த பொருள்செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மகா கும்பாபிஷேகம் ஜூலை 16 ஆம் நடைபெறுகிறது.
இதையொட்டி புதன்கிழமை காலை மங்கள இசையுடன் கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து, அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜை, யஜமான சங்கல்பம், கோ பூஜை , சிறப்பு ஹோமங்களும் மாலையில் வாஸ்து சாந்தி,யாக ,சாலை பிரவேச பூஜைகளும் நடைபெறும்.
13- ஆம் தேதி முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு பூா்ணாஹுதியும் நடைபெறும். தொடா்ந்து ஜூன் 14, மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் ஜூன் 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிமுதல் 8 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.